
நேற்று கிழக்குக்கரை நெடுஞ்சாலையில், தித்திவங்சா மலைத் தொடருக்கு அருகில் நேர்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியாயினர்.
அந்த ஐவரும் தங்களது பெரோடுவா அல்ஸா காரில் கெரிக்-ஜெலி சாலையில் பயணிக்கும்போது மதியம் 3.40 மணியளவில் தோயோத்தா ஹீலக்ஸ் வாகனத்தொடு மோதி விபத்தில் சிக்கினர்.
அதில் மேலும் இருவர் கடுமையான காயத்துக்கு இலக்காகினர். காயமடைந்தோர் கிளந்தான் ஜெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் இறந்தவர்கள் Rodhi Othman ரோடி ஓஸ்மான்(58), அவரின் மனைவி Sharifah Rohana Syed Sagaf, (ஷாரிஃபா ரொஹான சைட் சகாப்) (59), அவர்களது மகள் Siti Aishah (சித்தி ஐஷா) (32), மருமகன் Ahmad Khomaini Abu (அமாட் கொமைனி அபு) (30), 5 வயது நிரம்பிய பேத்தி Zara Hana (ஸாரா ஹானா) ஆகியோராவர்.
