31 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

சபா பிள்ளைகள் உயிரைப் பணயம் வைத்துப் பள்ளி செல்கின்றனர்

🔥 Views : 8
👁 Reading Now : 40

சபா, பித்தாஸில் உள்ள Kampung Mangkabusu (கம்போங் மெங்காபுசு) வில் உள்ள பள்ளி மாணவர்கள் Sungai Bengoka (சுங்கை பெங்கொக்கா) ஆற்றைக் கடக்க சிறு படகுகளில் பயணித்த காட்சியின் வீடியோ பதிவு வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றின் பாலம் வெள்ளத்தில் அடுத்துச் செல்லப்பட்டதால் 30 மாணவர்கள் உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் சென்று பின்னர், வீடு திரும்புகின்றனர். ஆற்றில் நீர் அதிகமானால் அன்று பள்ளிக்குப் போக முடியாது. தினந்தோறும் பள்ளிக்குச் செல்வது அம்மாணவர்களுக்கு மரண பயம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் சில மாணவர்கள் ஆற்றில் விழுந்து பலியானதாகவும் சொல்லப்படுகிறது. அங்குள்ள ஊராட்சி நிர்வாகமும் மாநில அரசும் இதில் எதையும் செய்யாமல் வேடிக்கை பார்ப்பது ஏன் என்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles