30.1 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

பாங் அம்பாட் வரலாற்றையும் புகழையும் கூறும் ராவண மேடை!

பினாங்கின் தென் செபராங் பிறை மாவட்டத்திலுள்ள சிம்பாங் அம்பாட் என்ற ஊரின் வரலாற்றையும்,புகழையும் கூறும் ராவண மேடை,இன்று புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கிறது.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து சஞ்சி கூலிகளாக மலேசியாவிற்கு வந்த தமிழர்கள் இங்கு தங்கியிருந்துள்ளனர்.
இதன் அருகில் இருந்த கிணற்றில் அவர்கள் குளித்து விட்டு,இந்த ராவண மேடையில் இரவும் பகலும் அவர்கள் அனைவரும் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
சிம்பாங் அம்பாட் நகரின் மத்தியின் சாலை ஓரத்தில் இந்த ராவண மேடை அமைந்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் கிடந்த இதனை,நல்லுள்ளம் கொண்ட தனி நபர் ஒருவர் சீரமைத்துள்ளார்.
இன்று புதுப்பொலிவோடு திகழும் இந்த ராவண மேடை சிம்பாங் அம்பாட் வரலாற்றை கூறும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles