31 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

மற்ற சமயங்களைத் அவதூறாகப் பேசி வரும் வான் அஸிமாவுக்கு நிரந்தரத் தடை

🔥 Views : 8
👁 Reading Now : 40

கூச்சிங்கை சேர்ந்த Pondok Muslima Malaysia (போண்டோக் முஸ்லிமா மலேசியா) அமைப்பைச் சேர்ந்த Wan Asshima Kamaruddin (வான் அஸிமா கமாருடின்) மற்ற மதங்களைக் கடுமையாக விமர்சித்து, குறிப்பாக கிறிஸ்துவத்தை பூண்டோடு ஒழிக்க வேண்டுமென்று அறைகூவல் விடுத்து வந்துள்ளார்.
மேலும், அண்மையில் அவர் 12 நிமிட நேரம் ஓடும் வீடியோ பதிவொன்றையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.
38 வயதான அவர் பல காலமாக மற்ற மதங்களின் மீது வெறுப்பைக் காட்டி, மத நல்லிணக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டு வருவதை எதிர்த்து சபா, சரவாக், கோலாலம்பூர், சிலாங்கூர் ஆகிய இடங்களில் 61 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
ஜூலை 14ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த கூச்சிங் செஷன்ஸ் நீதிமன்றம் அவர் மற்ற சமயங்களைத் தூற்றிப் பேசுவதற்கு முற்றாகத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles