
தம்முடைய Parti Bangsa Malaysia (பார்ட்டி பங்சா மலேசியா) தேசிய முன்னணி கூட்டணியில் சேர்வதற்கான விண்ணப்பம் சம்பந்தமாக எந்த விதமான முடிவையும் தமது கட்சி ஏற்றுக் கொள்ளும் என்று அதன் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஸுரைடா கமாருடின் தெரிவித்தார். திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டத்திற்குப் பின்னர், அதன் முடிவு தெரியவரும் என்று அவர் குறிப்பிட்டார். பிபிஎம்மின் விண்ணப்பத்தை தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளே முடிவு செய்யும் என்று அம்னோவின் துணைத் தலைவர் முகமட் ஹசான் குறிப்பிட்டிருந்தார். பிபிஎம்மில் மக்கள் செல்வாக்கும் ஆதரவும் பெற்ற எம்பிக்கள் இருப்பதால் 14ஆவது பொதுத்தேர்தலில் அவர்கள் வெற்றியைக் கொண்டு வரமுடியும் என்று நம்பப்படுகிறது. கட்சியைப் பார்த்து வாக்களிக்காமல், வேட்பாளரின் அடைவு நிலையைக் கவனித்தே மக்கள் வாக்களிப்பதாக ஸுரைடா தெரிவித்தார்.
