31 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

இந்திய சமூக மேம்பாட்டிற்கான தொலைநோக்கு திட்டத்தை பக்காத்தான் கூட்டணி அமல்படுத்தும்

🔥 Views : 7
👁 Reading Now : 51

இந்திய சமூகம் மேம்பாட்டிற்கான தொலைநோக்கு திட்டத்தை பி,கே,ஆர் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கொண்டிருப்பதாக அக்கட்சியின் உதவித் தலைவரான வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின் பக்காத்தான் ஹராப்பான் கூட்டரசு அரசாங்கத்தை கைப்பற்றிய போதிலும் நிர்வாக ரீதியில் பல்வேறு சீரமைப்புக்களை செய்ய வேண்டியதற்கு நிறைய கால அவகாசம் தேவைப்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் எங்களது 22 மாத கால ஆட்சி கட்சி தாவியர்கள் மூலமாக கவிழ்ந்தது என்றார் அவர்.

எதிர்வரும் 15 – ஆவது பொதுத் தேர்தலில் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சியை அமைத்தால் இந்திய சமூகத்திற்கு தேவையான அடிப்படை உரிமைகள் கொள்கையாக வரையப்பட்டு அவை சட்டமாகவும் இயற்றப்படும் என்றும் அதற்கான சில அடிப்படை வேலைகளில் பக்காத்தான் ஹராப்பானின் இந்தியத் தலைவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜ தெரிவித்தார். அண்மையில்கூட இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கான சிறப்பு வரைவு திட்டம் நிபுணத்துவ குழுவினால் வரையப்பட்டு டத்தோஸ்ரீ அன்வாரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட அன்வார் இது குறித்து கூடிய விரைவில் பல்வேறு தரப்பினருடன் விவாதிப்பதாகவும் கூறியிருப்பதாக ஓம்ஸ் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் இப்போது நாம் பொதுத் தேர்தலை சந்திக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே 40 அரசு சார்பற்ற இயக்கங்களை சேர்ந்த ராப்பாட் என்ற கூட்டமைப்பு இம்முறை பக்காத்தான் ஹராப்பானை ஆதரிப்பதாக அதன் தலைவர் ராஜரத்தினம் ஆறுமுகம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles