28 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

அஞ்சல் வாக்கு செலுத்த அக். 23க்குள் பதிவு செய்ய வேண்டும்

🔥 Views : 7
👁 Reading Now : 56

வெளிநாட்டில் இருக்கும் மலேசியர்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க முன் கூட்டியே பதிவு செய்ய கடைசி நாளாக அக்டோபர் 23 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கால வரம்பு வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கானது என்றும் வெளிநாட்டில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் 2,741 பேர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, தேர்தலுக்கான பணியாளர்கள், போலீஸ்காரர்கள், இராணுவத்தினர், ஊடகவியலாளர்கள் ஆகியோர் நவம்பர் 2ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இன்னொரு பிரிவினரான இயக்கங்கள், ஏஜென்சிகளில் பணியாற்றுவோர் அஞ்சல் மூலம் வாக்களிக்க விரும்பினால் அவர்கள் அக்டோபர் 26ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அஞ்சல் வாக்கு செலுத்த விரும்புவோர் தேர்தல் ஆணையத்தின் அகப்பக்கம் https://myspr.spr.gov.my/login இன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles