28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

கிள்ளான் தொகுதியில் சார்ல்ஸ் சந்தியாகோவுக்குப் பதிலாக யார்?

🔥 Views : 7
👁 Reading Now : 60

மூன்று முறை கிள்ளான் எம்பியாகப் பதவி வகித்து வந்திருக்கும் சார்ல்ஸ் சந்தியாகோ இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கட்சி வட்டாரம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், அத்தொகுதியில் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வி. கணபதி ராவ் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் ஸ்ரீகெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் Ean Yong Hian Wah (இயன் யோங் ஹான் வா) அத்தொகுதியில் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டது.
2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சார்ல்ஸ் அத்தொகுதியில் 78,773 வாக்குப் பெரும்பான்மையில் தேசிய முன்னணி, பாஸ் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles