28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

திருடர்களைப் பாதுகாக்கவே பொதுத்தேர்தல்?

🔥 Views : 7
👁 Reading Now : 38

நாட்டில் பொதுத்தேர்தலை நடத்துவதன் நோக்கமே பொருளாதார வளர்ச்சியையும் சமூகத் திட்டங்களைச் செயல்படுத்தவே ஆகும்.
இவ்வேளையில், இப்போது ஊழல் வழக்கில் சிறை செல்லவிருக்கும் அம்னோ தலைவர்களையும் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த தலைவர்களையும் தற்காக்கவே இஸ்மாயில் சப்ரி பொதுத்தேர்தலை நடத்தவிருப்பதாக அமானா தலைவர் முகமட் சாபு குற்றம் சாட்டினார்.
மஇகா பேராளர் கூட்டத்தில் உரையாற்றிய அம்னோ தலைவர் ஸாஹிட் ஹமிடி, பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால் தாமும், துணைத் தலைவர் முகமட் ஹசான், இன்னும் பல தலைவர்களும் சிறையில் தள்ளப்படுவது நிச்சயம் என கூறியிருப்பதை முகமட் சாபு சுட்டிக்காட்டினார்.
பல்வேறு ஊழல் நடவடிக்கையினால் நாட்டின் கோடிக் கணக்கான பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மிகவும் துன்பப்படும் விவசாயிகள், மீனவர்களுக்கு இந்த அரசு எந்த உதவியையும் செய்ய முடியவில்லை என்று 7,000 பேர் கலந்து கொண்ட, ஈப்போவில் நடந்த பக்காத்தான் மாநாட்டில் உரையாற்றும்போது முகமட் சாபு இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles