26.9 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

பத்து காவான் எம்பி கஸ்தூரி பட்டு போட்டியிட மாட்டார்

🔥 Views : 8
👁 Reading Now : 48

இந்தப் பொதுத்தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று பினாங்கு, பத்து காவான் எம்பி கஸ்தூரி பட்டு அறிவித்தார்.
புதிய வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்குவதற்காகத் தாம் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
தமக்கு அரசியலில் இடம் கொடுத்து பத்து காவான் தொகுதியில் இரு தவணைகள் எம்பியாகப் பதவியில் அமர வாய்ப்பு கொடுத்த ஜசெகவின் மறைந்த மூத்த தலைவர் கர்ப்பால் சிங்கிற்கு தமது மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
43 வயதானவரும் ஜசெகவின் மூத்த தலைவர் பி. பட்டுவின் புதல்வியுமான கஸ்தூரி பட்டு 2013 பொதுத்தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டு 25,962 வாக்குப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles