33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

தம்புன் தொகுதியை பைஸால் அஸுமு தற்காப்பார்

🔥 Views : 7
👁 Reading Now : 50

பெர்சத்துவின் துணைத் தலைவர் Ahmad Faizal Azumu (அமாட் பைஸால் அஸுமு) தமது தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருக்கும் அன்வார் இப்ராஹிமை எதிர்த்துப் போட்டியிட்டு தற்காத்துக் கொள்ளவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பேராக்கின் முன்னாள் மந்திரி பெசாரான அவர், அன்வாரை எதிர்கொள்ள அச்சப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
தம்புந் தமது உணர்வில் கலந்த ஒரு தொகுதி என்பதால் அதனை விட்டு எங்கும் ஓடப் போவதில்லை என்றும் அங்கு வெற்றியோ தோல்வியோ அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த பொதுத்தேர்தலில் ஃபைசால் தம்புன் தொகுதியில் போட்டியிட்டு 5,320 பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம், தாம் தம்புன் தொகுதியில் போட்டியிடும் சாத்தியம் இருப்பதாக அன்வார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles