25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

நஜிப்பின் எஸ்ஆர்சி வழக்கின் சீராய்வு மனு ஜனவரி 19இல் விசாரிக்கப்படும்

🔥 Views : 6
👁 Reading Now : 44

எஸ்ஆர்சி வழக்கில் அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து நஜிப் செய்து கொண்ட சீராய்வு மனு, அடுத்தாண்டு ஜனவரி 19, 20, 25ஆம் தேதிகளில் 3 நாள்களுக்கு விசாரிக்கப்படும் என கூட்டரசு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அது சம்பந்தமான எழுத்துப்பூர்வ வாதங்கள் ஜனவரி 4ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அந்தச் சீராய்வு மனு வாதத்தில் அரசின் சார்பில் வழக்கறிஞர் வி. சிதம்பரம் கலந்து கொள்வார்.
அந்த வழக்கில் நஜிப்பிற்கு அளிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனை, 21 கோடி ரிங்கிட் அபராதத்தை கூட்டரசு நீதிமன்றம் உறுதி செய்தது.
அந்த வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனை இயற்கை சட்ட நடைமுறைக்கு மாறாகவும் நியாயமற்ற முறையிலும் அளிக்கப்பட்டிருப்பதால், தமது சீராய்வு மனுவைக் குறைந்தது 7 நிதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டுமென நஜிப் கேட்டுக் கொண்டிருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles