25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் தீபாவளி வாழ்த்து

🔥 Views : 6
👁 Reading Now : 48

மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம்-பிரிமாஸ் சார்பில் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் உள்ளிட்ட இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக பிரிமாஸ் தலைவர் சுரேஸ் என்கின்ற கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தீபாவளி நந்நாள் தேர்தல் திருவிழா பரபரப்புடன் கொண்டாடப்படுகிறது.

கடந்த இரு வருடங்களாக உணவு வர்த்தகத் துறை பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு ஓரளவு மீட்சிபெறும் நிலை இருந்தாலும் உணவக உரிமையார்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் தொழிலாளர் பற்றாக்குறை சிக்கலுக்கு இன்னமும் முழுமையான தீர்வு கிடைக்காத நிலையில் இந்த பாரம்பரிய சமய விழாவைக் கொண்டாடுகிறோம்.

தொடரும் ஆண்டுகளில் உணவகத் தொழில் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் மீண்டும் தீபத் திருநாள் வாழ்த்து தெரிவிப்பதாக சுரேஸ் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles