
Fwlcra (ஃபெக்ரா) குடியேற்றவாசிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு எந்த அதிகாரமும் இல்லையென்று ஈப்போ பாராட் எம்பி எம்.குலசேகரன் எச்சரித்துள்ளார்.
ஃபெல்க்ரா குடியேற்றவாசிகளின் கடன் தொகை 223.8 மில்லியன் ரிங்கிட்டைத் தள்ளுபடி செய்ய கொள்கை அளவில் தாம் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் பொதுத்தேர்தல் முடிந்த பின்னர், இவ்விவகாரம் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனறு இஸ்மாயில் சப்ரி தெரிவித்திருந்தார்.
பெர்சேவின் தலைவர் தோமஸ் ஃபான் அது பற்றிக் கூறும்போது, இஸ்மாயில் சப்ரியின் நடவடிக்கையானது அதிகாரத் துஷ்பிரயோகம் என்றும் அவரின் ஃபெல்க்ரா குடியேற்றவாசிகளின் வாக்குகளுக்கு வலைவீசும் இச்செயலானது ஊழல் என்றும் இதனை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
