25.3 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

முஹிடின் மருமகனின் விசா திட்ட குத்தகை சம்பந்தமாக எம்ஏசிசி விசாரணை

🔊To listen to this news in Tamil, Please select the text.

பக்காத்தான் ஆட்சி காலத்தில் அப்போதைய உள்துறை அமைச்சர் முஹிடின் யாசின் பதவியில் இருந்தபோது, தமது மருமகன் Adlan Berhan (அட்லான் பெர்ஹான்) மூலமாகப் பெருந் தொகையிலான National Integrated Immigration System (NIISe) குடிநுழைவு விசா திட்டக் குத்தகையை வழங்கியதாகக் குற்றம் கூறப்படுகிறது.
செக்குரிட்டி சொலுஷன் என சொல்லப்பட்ட அந்தக் குத்தகையானது எஸ்5 எனும் நிறுவனத்திற்கு, அட்லானின் சிபாரிசின் பேரில் தரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அத்திட்டத்தின் உண்மையான செலவினம் 1.2 மில்லியன் ரிங்கிட்டாக இருந்தபோது, குத்தகையானது 3.5 மில்லியன் ரிங்கிட்டுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
அண்மையில், தமது புதல்வி நூருல் இஸ்ஸா வை பொருளாதரத் துறையின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டதைக் கடுமையாக எதிர்ப்போர், தங்களது மகன்களுக்கும் மருமகன்களுக்கும் பல கோடி மதிப்பிலான குத்தகைத் திட்டங்களைத் தாரை வார்த்துக் கொடுத்தவர்களே ஆவர் என பிரதமர் அன்வார் இப்ராஹிம் குற்றம் சாட்டியிருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles