
🔊To listen to this news in Tamil, Please select the text.
தமிழ்ப்பள்ளிக்குத் தங்களின் பிள்ளைகளை அனுப்பத் தவறும் பெற்றோர் பள்ளிகளின் பொறுப்புகளில் இருக்கக் கூடாது அல்லது அவர்களைப் பள்ளிகள் தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், கோப்பெங் தமிழ்ப் பள்ளி பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசனின் சிறப்பு அதிகாரி உ. முத்துசாமி மேற்கண்ட கருத்தினை வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறும்போது, தமிழ்ப்- பள்ளிக்காக உழைத்த நல்லுள்ளம் படைத்த தமிழ்த் தலைவர்களை அப்பதவியில் அமர்த்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
மாணவர் பற்றாக்குறையால் நாட்டில் பல தமிழ்ப்பள்ளிகள் மூடப்படும் அபாயம் இருப்பதால், தமிழ்ப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கே அனுப்ப வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.



