29.1 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

அன்வார், ஸாஹிட்டுக்கு எதிராக பெர்சத்துவினர் போலீஸில் புகார்

🔥 Views : 4
👁 Reading Now : 38

🔊To listen to this news in Tamil, Please select the text.

சிலாங்கூரில் உள்ள 22 பெர்சத்து தொகுதிகள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி ஆகியோருக்கு எதிராக ஷா ஆலம் மாவட்ட தலைமையகத்தில் போலீஸ் புகார் அளிக்கப்படும் என மாநில பெர்சத்து தலைவர் Abdul Rashid Asari அப்துல் ரஷிட் அசாரி தெரிவித்தார்.
அவர்கள் இருவரும் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, பெர்சத்து தலைவர்களைக் கைது செய்து, கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கி, மாநிலத் தேர்தல்களில் போட்டியிடாதவாறு பெர்சத்துவுக்கு பல்வேறு இடைஞ்சல்களை ஏற்படுத்துவதாக அவர்கள் புகார் அளிப்பர் என அவர் தெரிவித்தார்.
பூமிபுத்ரா பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தில் முஹிடின் முதலில் 6,000 கோடி ரிங்கிட்டை முறைகேடு செய்ததாகவும், அதன் பின்னர் அந்தத் தொகை 5,300 கோடி, 9,250 கோடி, 450 கோடி என்றும் இறுதியில் அது 30 கோடி ரிங்கிட்டாகவும் சொல்லப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles