
🔊To listen to this news in Tamil, Please select the text.
2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் அமைச்சரும் பெர்சத்துவின் உச்சமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட ஓரினைப் புணர்ச்சி வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென 6 அரசு சாரா இயக்கங்களைச் சேர்ந்த பிரதிநிதி Mohd Zarir Md Nor (முகமட் ஸாரிர் மாட் நோர்) நேற்று டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றைக் அளித்துள்ளார்.
ஈது சம்பந்தமான வீடியோ பதிவில் அஸ்மின் அலியின் உருவ அமைப்பைக் கொண்ட ஒருவர் தென்படுவதாக சந்தேகம் எழுப்பப்பட்டு பின்னர், அப்போதைய போலீஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் அந்த வீடியோ பதிவில் இருப்பவர்களை அடையாளம் காண முடியவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் அஸ்மின் அலியை துன் மகாதீர் காப்பாற்றியதாக அப்போது பரவலான சந்தேகம் எழுப்பப்பட்டது.
எனினும், அந்தப் பதிவில் சம்பந்தப்பட்டிருந்த சபா, சந்துபோங் பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் Haziq Aziz (ஹாஸிக் அஸிஸ்) அதில் உள்ளவர்கள் தாமும் அஸ்மின் அலியும் என்று உறுதிப்படுத்தினார்.



