32.4 C
Kuala Lumpur
Friday, July 3, 2026

Vetri

மறியல் விவகாரம்- மருத்துவர்களின் குறைகளைக் கேட்டறிய சிறப்புக் குழு

🔥 Views : 13
👁 Reading Now : 34

🔊To listen to this news in Tamil, Please select the text.

அடுத்த வாரம் மறியலில் ஈடுபடப் போவதாக ஒப்பந்த மருத்துவர்கள் மருட்டியுள்ள நிலையில் மருத்துவர்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சில அமைச்சுகள், அரசு துறைகள் மற்றும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் ஆகியோரை உள்ளடக்கிய இக்குழுவை அமைப்பதற்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் ஜலிஹா முஸ்தாபா கூறினார்.
பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும பரவலாக வெளியிடப்பட்டு வரும் ஒப்பந்த மருத்துவர்களின் மனக்குமுறல் தொடர்பான விவகாரத்திற்கு தீர்வு காணும் நோக்கில் இந்த குழு அமைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மருத்துவத் துறையைப் பொறுத்த வரை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சரியான வழியாக மறியல் ஒருபோதும் அமையாது என்றும் அவர் சொன்னார்.
வரும் திங்கள்கிழமை தொடங்கி புதன் கிழமை வரை ஒப்பந்த மருத்துவர்கள் மறியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் கூறுகின்றன. எனினும் இந்த மறியல் தொடர்பில் அமைச்சுக்கு இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றார் அவர்.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மறியல் சரியான தீர்வாக அமையாது. மேலும், மருத்துவத் துறை என்பது மனிதர்களின் உயிர் மற்றும் அவர்களின் சுகாதாரம் சம்பந்தப்பட்ட மிக முக்கிய துறையாகும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தீர்ப்படாமலிருக்கும் தங்கள் பிரச்சினைகளை முன்வைத்து ஒப்பந்த மருத்துவர்கள் மறியலில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர். வரும் 3 முதல் 5ஆம் தேதி வரை சுமார் 8,000 மருத்துவர்கள் மறியலில் ஈடுபடவும் மேலும் 3,000 மருத்துவர்கள் வரும் நாட்களில் பணியிலிருந்து விலவும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles