
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஜொகூரில் இவ்வாண்டு ஜனவரி 1 ஆம் தேதிமுதல் இதுவரை நிகழ்ந்த 2,079 இணைய மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் 71 மில்லியன் ரிங்கிட்டிற்கும் கூடுதலாக இழந்தனர். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 1,800 பேர் பாதிக்கப்பட்டதை ஒப்பிடுகையில் இவ்வாண்டு இணைய மோசடியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 விழுக்காடு அதிகரித்ததாக ஜொகூர் போலீஸ் தலைவர் கமாருல் ஜமான் மாமாட் தெரிவித்தார்.
மின் வர்த்தக நடவடிக்கையின் மூலம் 485 பேர் தங்களது பணத்தை இழந்தனர். இதுதவிர செயல்படாத முதலீட்டுத் திட்டத்தில் 382 பேரும், தொலைபேசி மோசடித் திட்டங்கள் மூலம் 368 பேரும் , வேலை வாங்கித் தரும் திட்டத்தின் மூலம் 361 பேரும் , இல்லாத கடன் வசதி திட்டம் தொடர்பில் ல் 338 பேரும் தங்களது பணத்தை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 2,079 சம்பவங்களில் 478 பேர் தாங்கள் மோசடிக்கு உள்ளானதைத் தொடர்ந்து தேசிய மோசடி புகார் பிரிவிடம் தெரிவித்துள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் ஜமான் மாமாட் தெரிவித்தார். இணைய மோசடி சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதால் அது குறித்து பொதுமக்கள் மிகவும் விழிப்பாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
