
🔊To listen to this news in Tamil, Please select the text.
‘Cryptocurrency’ முதலீடு மோசடி திட்டத்தில் தஞ்சோஞ் மாலிமைச் சேர்ந்த 67 வயதுடைய ஓய்வு பெற்ற பாதுகாவலர் ஒருவர் 700,000 ரிங்கிட்டிற்கும் கூடுதலாக இழந்தார். இது தொடர்பாக அந்த ஆடவர் போலீசில் புகார் செய்துள்ளதாக பேரா போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மட் யுஸ்ரி ஹாசன் பஸ்ரி தெரிவித்தார். மே 22 ஆம் தேதி இணையத்தில் யோமேக்ஸ் க்ரிப்தொ மார்க்கெட் செய்த விளம்பரத்தை பார்த்து அதன் முகவரிடம் தாம் தொடர்புகொண்ட போது, தங்கள் நிறுவனம் பாரிசில் இருந்து செயல்படுவதாகம் முதலீட்டு கணக்கை தொடங்க ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதன் படி கணக்கை தொடங்கிய பின்னர் கொடுத்த வங்கிக் கணக்கிற்கு தாம் முதலில் 8,000 ரிங்கிட் அனுப்பியதாகவும் பாதிக்கப்பட்ட அந்த ஊரியர் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் தமது முதலீடு 14,985 அமெரிக்க டாலராக உயர்ந்ததைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை கூடவே மேலும் ஏழு லட்சத்து 17,050 ரிங்கிட்டை முதலீடு செய்ததாக அந்த நபர் புகார் செய்துள்ளார்.
வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 17 முறை தமது பணத்தை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததோடு அக்டோபர் 5 ஆம் தேதி தமது வங்கிக் கணக்கில் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் இருந்ததாகவும் அதனை மீட்பதற்கு தாம் மேற்கொண்ட முயற்சி தோல்வி கண்டதாக பாதிக்கப்பட்ட அந்த ஆடவர் தமது புகாரில் தெரிவித்துள்ளார். அக்டோபர் 6ஆம் தேதி தமது வங்கிக் கணக்கில் இருந்த அனைத்து பணமும் மாயமாகியதால் தாம் மோசடிக்கு உள்ளானதை உணர்ந்து அந்நபர் போலீசில் புகார் செய்ததாக முஹம்மட் யுஸ்ரி கூறினார்.