29.6 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு அக்கறை இல்லை!

🔥 Views : 5
👁 Reading Now : 29

🔊To listen to this news in Tamil, Please select the text.

இந்திய இளைஞர்களின் எதிர்காலம் குறித்து ஒற்றுமை அரசாங்கத்திற்கோ அல்லது பிரதமருக்கோ அக்கறை இல்லையென்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி கெடா மாநிலப் பொறுப்பாளரும் ஹிண்ட்ராஃப் கெடா மாநிலத் தலைவருமான விவேகானந்தன் அம்மாசி தெரிவித்துள்ளார்

மலேசிய இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் திட்டம் தீட்டியவர் அந்நாளைய அமைச்சர் பொன். வேதமூர்த்தி.

நான்காவது தொழிற்புரட்சியை கருத்தில் கொண்டு ட்ரோன் பயிற்சியில் முனைப்பு காட்டியது, அதைப்போல தொஷிபா உள்ளிட்ட பன்னாட்டு வர்த்தக-தொழில் நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்து இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்காக குறுகிய கால தொழில்நுட்பப் பயிற்சிக்கு திட்டமிட்டது என இந்திய இளைய சமுதாயத்தின் நலம் கருதி தொடர்ந்து திட்டங்களைத் தீட்டினார்.

இப்போது, ஆறு ஆண்டுகள் கழித்து இன்றைய மடானி தலைவர்கள் முடி திருத்தும் பயிற்சி, தையல் கலை, காணொளிக் காட்சி என்று 20-ஆம் நூற்றாண்டிலேயே நிற்கின்றனர்.

இந்தப் பயிற்சிகள் தேவை இல்லையென்றோ, தரம் தாழ்ந்தவை என்றோ எவரும் சொல்லவில்லை. இந்த பாரம்பரியத் தொழில்கள் தொடரட்டும் ஒருபக்கம்.

அரசாங்கப் பொறுப்பில் இருக்கும் தலைவர்கள், நம் சமுதாயத்தின் எதிர்காலம் கருதி, முற்போக்கு சிந்தனையுடன் செயல்படக் கூடாதா எனபதுதான் கேள்வி.

இதை இந்திய சமுதாயமே எண்ணிப் பார்க்கட்டும் என்று அ. விவேகானந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles