
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிரம்பான், ஆக.04:
மலேசிய இந்து சங்க நெகிரி செம்பிலான் மாநிலப் பேரவையின் 46-ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா நேற்று சைவ நெறி மிளிரவும் பக்தி மனம் கமழவும் மிக சிறப்பாக நடந்தேறியது.
இதில் சுமார் 400 மாணவர்கள் கலந்துக்கொண்டனர். காலையில் தேசிய துணைத் தலைவர் கணேஷ் பாபு கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.
பிற்பகல் அங்கத்தில் தேசியத் தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

திருமுறைப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார். முன்னதாக,உ தேசியத் தலைவருக்கு சிறப்பு பரிசாக நந்தியம்பெருமான் பதித்த செங்கோல் வழங்கப்பட்டது. சிரம்பான் வட்டாரம் ஒட்டுமொத்த வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டது.
