29 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

சிலாங்கூருக்கு குறைவான தடுப்பூசியா? சுல்தான் அதிர்ச்சி!

🔥 Views : 9
👁 Reading Now : 34

சிலாங்கூர் மாநிலத்திற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்குவதை தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்புக் குழு விரைவுபடுத்தும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்திற்கு முன்பு கூறப்பட்டதைப் போல் 29 லட்சம் தடுப்பூசிகள் அல்லாமல் 615,210 தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டதை கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை அமைப்பு ஒப்புக் கொண்டது குறித்து தாம் அதிர்ச்சியடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சுமார் 65 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சிலாங்கூர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் விகிதாசாரம் நியாயமற்றதாக உள்ளதோடு சமநிலையற்றும் காணப்படுகிறது என்று அவர் சொன்னார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன். ஆகவே, தடுப்பூசி வழங்குவதில் இம்மாநிலத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles