30.3 C
Kuala Lumpur
Tuesday, August 11, 2026

Vetri

மாடுகள்- எருமைகளை இறக்குமதி செய்ய தடை!

🔥 Views : 33
👁 Reading Now : 35

தாய்லாந்திலிருந்து மாடுகள் மற்றும் எருமைகளை இறக்குமதி செய்ய மலேசிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.
தாய்லாந்திலுள்ள 41 பகுதிகளில் எல்.எஸ்.டி. எனப்படும் பெரியம்மை நோய் கால்நடைகளை பீடித்துள்ளதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கால்நடைத் துறையை பாதுகாக்கும் நோக்கிலும் தாய்லாந்திலிருந்து பெரியம்மை நோய் நாட்டில் பரவுவதை தடுப்பதற்காகவும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கால்நடை சேவைத் துறை கூறியது.
தாய்லாந்திலிருந்து மாடுகள் அல்லது எருமைகளை வாங்குதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் அத்திட்டத்தை ரத்து செய்யும்படி இறக்குமதியாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போரை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என அத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles