
நாட்டில் நோய்த்தொற்று தாக்கம் இன்னமும் மோசமான கட்டத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
தற்போது சில தினங்களாக நோய்த்தொற்று எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இருப்பினும் மலேசியாவில் அதன் தாக்கம் இன்னும் மிகக் கடுமையாகவே இருக்கிறது என்று அவர் சொன்னார்.
இந்த மாதத்தில் எட்டு தினங்களில் 740 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, மலேசியர்கள் நோய்த் தொற்றுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்கும்படி என அவர் கேட்டுக் கொண்டார்.
