25.7 C
Kuala Lumpur
Thursday, October 1, 2026

Vetri

மாமன்னரை சந்தித்தார் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன்

🔥 Views : 69
👁 Reading Now : 44

மாட்சிமைத் தங்கிய மாமன்னரை இன்று காலையில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்.
இன்று காலை 7.50 மணிக்கு பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன், மாமன்னரை சந்திக்க இஸ்தானா நெகாராவுக்கு வருகை புரிந்தார்.
ஒரு மணி நேரம் சந்திப்பிற்கு பின்னர் பிரதமர் அங்கிருந்து புறப்பட்டார். இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்திற்கு அவர் தலைமை ஏற்கிறார்.
இதனைத் தொடர்ந்து கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மாமன்னரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாலையில் மாமன்னரை சந்திக்க தங்களுக்கு அழைப்பு வந்திருப்பதாக ஜசெக அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
ஜசெக கட்சி சார்பில் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் மாமன்னரை சந்திப்பார் என்று அவர் தெரிவித்தார்.
அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மாமன்னர் சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles