28 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

பூக்கடைகளை திறக்க அனுமதி வழங்காமல் இருப்பது ஏன்?

🔥 Views : 8
👁 Reading Now : 21
To listen this news in Tamil, Please click play button

நாட்டில் பூக்கடைகள் திறக்க இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான பூக்கடை வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் தெரிவித்தார்.
கடந்த வாரத்தில் இது குறித்து நான் கேள்வி எழுப்பி இருந்தேன். கேமரன் மலையிலிருந்து கொண்டுவரப்படும் பூக்கள் அனைத்தும் குப்பையில் கொட்டப்படுகின்றன. கேமரன் மலையில் பூ வியாபாரம் செய்யும் மொத்த வியாபாரிகளும் இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியர்கள் மற்றும் சீனர்கள் தினசரி தங்களது தெய்வ வழிபாட்டிற்கு பெருமளவில் பூக்களை பயன்படுத்துவார்கள். இறப்பு போன்ற காரியங்களுக்கு பூக்கள் அதிக அளவில் தேவைப்படும்.
கடந்த எட்டு தினங்களாக நாட்டிலுள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் பொதுமக்களும் பூக்களை வாங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள் பூக்கடை வியாபாரிகளும் தங்களது வருமானத்தை இழந்துள்ளனர். அரசாங்கம் உடனடியாக பூக்கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று குலசேகரன் கேட்டுக்கொண்டார். image Credit – V.MOGANRAJ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles