28 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

வேலையிழந்தவர்களுக்கு சொக்சோ காப்புறுதி!

🔥 Views : 9
👁 Reading Now : 28

நோய்த்தொற்று தாக்கத்தினால் வேலையை இழந்தவர்கள் சொக்சோ காப்பீட்டு நிதியுதவியைப் பெறலாம் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
நாளுக்கு நாள் பெருகிவரும் கொரோனாவின் தாக்கத்தை குறப்பதற்கு அரசாங்கம் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை 3.0-வை அமல்படுத்தியுள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாடு காலகட்டத்தில் மக்களுக்கு உதவியாகப் பல்வேறு திட்டங்களை அரசாங்கம் அமல்படுத்தி வருகிறது. இதில் மனிதவள அமைச்சின் கீழ் பெமெர்காசா தொடர்திட்டத்தின் வழியாக சம்பள மானியத் திட்டம் 3.0 மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த முழுமுடக்கத்தினால் பாதிப்புற்றிருக்கும் பொருளாதாரத் துறைகளுக்குக் கூடுதலாக ஒரு மாதச்சம்பள மானியம் மனிதவள அமைச்சின் கீழ் வழங்கப்படுகிறது. இதனால் வேலையிழப்புகளையும்வேலை நிறுத்தங்களையும் குறைக்க வழிவகை செய்திருக்கிறது.
அப்படி வேலையிழந்தவர்களுக்கு உதவும் வகையில், வேலை காப்புறுதித் திட்டம் ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக அமலில் இருந்து வருகிறது.
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் பெர்கேசோ வழி வேலை இழந்த பங்களிப்பாளர்களுக்கு உதவித் தொகை வழங்கி, வேலை கிடைப்பதற்கும் உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles