26.9 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

வெளி நாட்டினர் உடல் மீது படும்படியாக டெட்டால் தெளிப்பு ஒரு மோசமான செயல்!

🔥 Views : 7
👁 Reading Now : 53

ஆவணங்கள் இல்லாத  வெளிநாட்டினர் மீது , குடிநுழைவுத் துறை அதிகாரிகள் டெட்டால் எனப்படும் கிருமி நாசினியை தெளித்து  கோவிட் 19 நட்சுக் கிருமியை ஒழிக்கிறோம் என்ற போர்வையில்   நடத்திய கோரக்  காட்சி  என்னை அதிர வைத்தது என்று முஞ மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார். சர்வதேச  அளவில் நமது நாட்டிற்கு   கெட்ட பெயரை கொண்டு வந்துள்ளது.
கோவிட் 19 நச்சுக்கிருமி , டெட்டால் போன்ற கிரிமி நாசினிகளால்  ஒழிக்க முடியாது என்பதை  ஆய்வுகள் தெளிவாகக் கூறும் போது எந்த அடிப்படையில் இவர்கள்  இந்த நடவடிக்கையில் இறங்கினார்கள் என்பது தெரியவில்லை .
கிருமி நாசினிக்கு பதிலாக   முகக்கவரி ,கை கழுவும் திரவங்களை   கொடுத்திருக்கலாம்
இப்பொழுது நடந்துள்ள இந்த செயல் மீண்டும் உலகத்தின் கவனத்தை  மலேசியா மீது ஈர்த்துள்ளது.

MP Kulasegaran


இதனைக் கண்டு மனித வள அமைச்சு அமைதியாக இருக்கக் கூடாது. உடனடி நடவடிக்கை தேவை. வருடாவருடம்  ஜெனிவாவில் உலக தொழிலாளர் நிறுவனம் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் மலேசியா கலந்து கொள்ளும்  நோக்கமே  மனித வளத்துறையில்  மலேசியாவும் அதன் பங்கை ஆற்ற கடமைப்பட்டுள்ளது  என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டத்தான். ஆனால் இப்பொழுது ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினரை அது நடத்திய விதம் உலக தொழிலாளர் அமைப்பு வரையறுத்துள்ள  கோட்பாடுகளுக்கு  எதிராக  அமைந்துள்ளது.
ஆவணங்கள்  இல்லாத ஒரு மலேசிய தொழிலாளி ஒருவர் வெளி நாட்டில் இருக்கும் பட்சத்தில் அவர் மீது டெட்டோலை உடல் முழுவதும் தெளித்தால் அதைக்கண்டு மலேசிய அரசாங்கம் மௌனமாக  இருக்குமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இது போன்ற விடயங்களில் உள்துறை அமைச்சு , சுகாதார துறையின் ஆலோசனகளை பெறுவது அவசியம் என்று நினைக்கிறேன். இகானாமிக்ஸ் டைம்ஸ் ஒஃப் இந்தியா என்ற பத்திரிக்கை சமீபத்தில், கோவிட் 19 ஐ கட்டுப்படுத்த கிருமினி நாசினிகளை மக்கள் மீது தெளிப்பது  அவர்களுக்கு   உடல் ரீதியாகவும்  , உள  ரீதியாகவும்  தீங்குகள் விளைவிக்கும் என்று  இந்திய சுகாதார அமைச்சுடன் கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது .இதையும் நமது அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த செயலுக்கு உள்துறை அமைச்சு பாதிக்கப்பட்ட வெளிநாட்டினர் மற்றும் ஒட்டு மொத்த மலேசியர்களிடம் மன்னிப்பு கேட்க வெண்டுமென கேட்டுக் கொள்கிறன்.
இதன் தொடர்பில் மனித வள அமைச்சு இந்த செயல் குறித்து  ஒரு ஆலோசனை   அறிக்கை வெளியிட்டு , முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உலகத் தொழிலாளர் நிறுவனத்திற்கு மலேசிய மனித வள அமைச்சு  கடமைப்பட்டுள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles