30.7 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

மித்ரா நிதி எங்கள் ஆலயத்திற்கு கிடைக்கவில்லை!

மித்ரா நிதி எங்கள் ஆலயத்திற்கு கிடைக்கவில்லை என்று கோலாலம்பூர் சைட் புத்ரா ஜாலான் ரோப்சன் ஓம்சக்தி மகா மாரியம்மன் ஆலய நிர்வாகம் இன்று தெரிவித்தது.
கடந்த 1968ஆம் ஆண்டு எங்கள் ஆலயம் முறையாக பதிவு செய்யப்பட்டது. ஆண்டுதோறும் முறையாக ஆண்டறிக்கை, கணக்கறிக்கை சமர்பித்து வருகிறோம் கூட்டரசு பிரதேச இந்து சங்கத்தில் ஆலயம் உறுப்பியம் பெற்றுள்ளது.
நாட்டில் உள்ள பல ஆலயங்களுக்கு மித்ரா நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கத்தால் முறையாக பதிவு செய்யப்பட்ட எங்கள் ஆலயத்திற்கு நிதி வழங்கப்படவில்லை. லெம்பா பந்தாய் வட்டார இந்து சங்கப் பேரவை இது குறித்து எங்களிடம் மித்ரா மானியத்திற்கு விண்ணப்பம் செய்யும்படி ஆலோசனை வழங்கவில்லை என்று ஆலயத் தலைவர் ராஜா புலேந்திரன் மற்றும் செயலாளர் மூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.
கோலாலம்பூர் இந்து சங்கத்தின் பொறுப்பாளர்கள் இது தொடர்பில் எங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles