
நாட்டின் ஜனநாயக அமைப்பைப் பாதுகாக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, நாடாளுமன்றம் மீண்டும் கூட வேண்டும் என்ற தனது விருப்பத்தை மாமன்னரிடம் அம்னோ தெரிவித்தாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
தேசியச் செயல்பாட்டு மன்றப் (மாகேரன்) பாணியிலான ஓர் அரசாங்கத்தை நிறுவ வேண்டிய அவசியம் இந்த நேரத்தில் தேவை இல்லை.
மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் தவிர, ஆகஸ்ட் 1-க்குப் பிறகு அவசரகால அமலாக்கத்தை நீட்டிக்கக் கூடாது என்ற அம்னோவின் நிலைப்பாட்டையும் தெரிவித்ததாகக் கூறினார்.
