28.5 C
Kuala Lumpur
Tuesday, June 23, 2026

Vetri

மனிதவள அமைச்சின் ஏற்பாட்டில் HRD Corp நோன்பு திறப்பு விழா

🔥 Views : 4
👁 Reading Now : 52

மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் (HRD Corp) ஏற்பாட்டில் “Majlis Buka Puasa” நிகழ்ச்சி இன்று மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஸ்டீவன் சிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு முக்கியம் – அமைச்சர் ஸ்டீவன் சிம்

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஸ்டீவன் சிம், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து கவலை தெரிவித்தார்.

🗣️ “செய்தியாளர்கள் தங்கள் நலன் பாராமல் மக்களுக்கு செய்திகளை கொண்டு செல்ல உழைக்கிறார்கள். ஒரு இடத்தில் செய்தி சேகரித்துவிட்டு, அடுத்த செய்திக்காக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. இதை மனிதவள அமைச்சு உறுதிசெய்யும்.”

அவரது உரையில், ஊடகவியலாளர்களின் உழைப்பை மதிப்பளித்து, அவர்களுக்கு தேவையான ஆதரவும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்றார்.

நோன்பு திறப்பு நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

HRD Corp தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ வீரா ஷாகுல் ஹமித் தாவூத், மனிதவள அமைச்சின் அதிகாரிகள், HRD Corp நிறுவன ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில், உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மனிதவள அமைச்சு வழங்கி வரும் பயிற்சிகள் பற்றிய விவரங்களை அமைச்சர் வெளியிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles