29 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

சம்பளம் வழங்காததால் தொழிலாளி மரணம்! கட்டுமான நிறுவனம் கறுப்பு பட்டியலிடப்பட்டது

🔥 Views : 9
👁 Reading Now : 40
To listen this news in Tamil, Please click play button

பாகிஸ்தானைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளிக்கு 6,825 வெள்ளி பாக்கி சம்பளத்தை வழங்க மறுத்ததால் ஷர்சட் அமிட் என்ற தொழிலாளி அண்மையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட கட்டுமான தொழில் நிறுவனம் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார் .
அம்பாங்கில் கட்டுமான தொழிலில் ஈடுபட்ட இந்த நிறுவனத்தில் அவர் வேலை செய்து வந்தார்.
தனது சம்பளப் பாக்கியை நிறுவனம் கொடுக்க மறுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனம் பாகிஸ்தான் தூதரகத்தின் மூலம் 3,175 வெள்ளியை அவரின் குடும்பத்திற்கு செலுத்தி உள்ளது. இருப்பினும் இந்த சம்பவத்தை மனித வள அமைச்சின் ஆள்பல இலாகா விசாரணை நடத்தி அந்த தொழில் நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்த்து இருப்பதாக அவர் சொன்னார்.
மேலும், இந்த கட்டுமான நிறுவனம் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles