
போலீஸ் தடுப்புக் காவலில் மரணமுற்ற கணபதியின் மரண சம்பவம் IPCMC உருவாக்கத்தின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் உணர்த்துகின்றது.
போலீஸ் காவலில் ஏற்படும் மரண மற்றும் சித்திரவதைச் சம்பவங்கள் மனித உரிமை மீறலாகும். எனவே, கணபதி உட்பட்டு இதர காவல் கைதிகள் மரணத்திற்குக் காரணமான அதிகாரிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஜொகூர் பெக்கோ சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ் ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

இதுவரையில் போலீஸ் தடுப்புக் காவலில் ஏற்பட்ட பல மரண சம்பங்களுக்கு இன்றளவும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பொறுப்பேற்கவில்லை.
எனவே, IPCMC எனப்படும் போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையம் அமைக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தை விரைவில் சரிசெய்து சட்ட ஒழுங்கிணைச் சரிவர பேணுவது அரசாங்கத்தின் கடமையாகும்.
IPCMC அமைப்பதற்குக் காவல்துறையின் சார்பில் எதிர்ப்புகள் எழலாம். ஆனால், காவல்துறையினரின் தவறான செயல்களையும் அவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றங்களையும் விசாரிக்க எந்த சுயேச்சை ஆணையமும் இல்லை.
போலீசார் மீதான குற்றங்களை அவர்களைச் சார்ந்த உறுப்பினர்களே விசாரனைச் செய்வதால் காவல்துறையின் செயல்பாட்டில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது.
மேலும், போலீஸ்
காவலில் இருக்கும் தனி நபரின் உரிமைகளும் இதனால் அச்சுறுத்தப்படுகினன.
ஆகவே, சட்டத்தை நிலைநிறுத்தும் பொருட்டு நடப்பு அரசாங்கம் IPCMC எனப்படும் போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
இந்த ஆணையின் முதல் வழக்காக தடுப்புக் காவலில் மரணம் தொடர்பில் மரண வழக்கு அமைய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
