28.5 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

சிலாங்கூர் ஓட்டப் பந்தய சங்கத்தின் தலைவர் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக 6 மாவட்டங்கள் போர்க்கொடி

சிலாங்கூர் மாநில ஓட்டப் பந்தய சங்கத்தின் தலைவர் நோராயாத்தி கரிம் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக 6 மாவட்டங்கள் இன்று அறிவித்தன.

சிலாங்கூர் மாநில ஓட்டப் பந்தய சங்கத்தின் கணக்கறிக்கையை சமர்ப்பிக்க தவறியதால் அவர் உடனடியாக பதவி விலகுவது நல்லது என்று சிலாங்கூர் மாநில ஓட்டப் பந்தய சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ எஸ்.எம். முத்து தெரிவித்தார்.

இரண்டு வாரத்தில்
கணக்கு அறிக்கை அறிவிப்பதாக நடப்பு தலைவர் நோராயாத்தி கூறினார் .

ஆனால் இரண்டு வாரங்கள் கடந்தும் அவர் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

சிலாங்கூர் மாநிலத்தில் மொத்தம் 9 மாவட்ட ஓட்டப் பந்தய சங்கங்கள் உள்ளன.

இதில் கிள்ளான்,
உலு சிலாங்கூர்,
கோலலங்காட்,
பெட்டாலிங்,
உலு லங்காட் ஆகிய ஆறு மாவட்டங்கள் இன்று தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக டத்தோ முத்து தெரிவித்தார்.

இவர் இனியும் பதவியில் நீடிப்பது அழகல்ல.
தலைவராக நீடிப்பதற்கு அவர் தகுதியை இழந்து விட்டார் எனறு என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles