
இந்திய வர்த்தக மற்றும் தொழில் இயல் சங்கம் (PIBTIA) ஒழுங்கமைத்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு திட்டம் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக ஓய்.பி. பிரபாகரன் பங்கேற்று தலைமை ஏற்றார். நிகழ்வில் உரையாற்றிய அவர்,
“இந்தியர்களுக்காக அரசாங்கம் தொடர்ந்து பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. நமது பிரதமரின் வழிகாட்டுதலிலும் மித்ரா நிறுவனத்தின் பங்களிப்பிலும், சமூக மேம்பாட்டுக்காக செயற்படுகிறோம்,” என்றார்.
நிகழ்வில், 148 தொழிலாளர்களுக்கு அவர்களது தொழில் வளர்ச்சிக்காக மாவு இயந்திரம், ஐஸ் பெட்டி, ஹேர் கட்டிங் நாற்காலி உள்ளிட்ட தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்திய வர்த்தக தொழில் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு மற்றும் அவரது குழுவினர் சிறப்பாக நிகழ்வை ஒருங்கிணைத்ததற்காக பாராட்டை பெற்றனர்.
“ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முதலாளி உருவாக வேண்டும்” என்பதே திட்டத்தின் நோக்கம் எனவும், சமூகத்தின் வளர்ச்சிக்கு இதுபோன்ற நிகழ்வுகள் பெரும் பங்களிப்பாக அமைகின்றன எனவும் விருந்தினர்கள் தெரிவித்தனர்.



