
கோலாலம்பூர் ஜாலான் கொன்லேயில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் போலீஸ் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 19 கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட நான்கு அறைகளை வாடகைக்கு எடுத்து அதில் உள்நாட்டு ஆடவர்கள் உட்பட வெளிநாட்டு பெண்களும் ஒன்றுகூடி கூத்தும் கும்மாளமுமாக விருந்து ஒன்றை நடத்திக் கொண்டிருந்தனர்.அந்த விருந்து நிகழ்ச்சியில் அவர்கள் போதை மாத்திரைகள் உட்பட மது பானங்களையும் உட்கொண்டு மயக்க நிலையை அடைந்து இருந்ததாகவும் கோலாலம்பூர் போலீஸ் படையின் குற்றப்புலனாய்வு தலைவர் மன்சூர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் சில பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது என்றார் அவர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கும் மேலாக அவர்கள் அந்த நான்கு அறைகளை வாடகைக்கு எடுத் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த அதிரடி சோதனையில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 21 வயதிலிருந்து 35 வயதுக்குட்பட்டவர்கள் ஆகும்.
