
இந்த மேடை நாடகம் வருகின்ற ஆகஸ்ட் 23 டெம்ப்லா பைனான்ஸ் மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற உள்ளது 3:30 இருந்து ஒரு பிரிவாகவும் 6:30 மணி ஒரு பிரிவாகவும் நடைபெற உள்ளது இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு விசாலாட்சி உணவக மேல் மண்டபத்தில் நடைபெற்றது. தியாகராஜன் பார்த்தசாரதி ராமன் பால தரும் லிங்கம் மற்றும் கவிமாறன் கலந்து கொண்டனர்.

மாறன் பேசும்போது நாடகம் முக்கியமானது ஒன்றாகும் இதிலிருந்து தான் சினிமா வந்தது நாடகத்தின் மூலமாக பல பேர் உருவாகி உள்ளார்கள் இந்த நாடகத்தை மறந்து விடாமல் இருக்க இதுபோல இதிகாச நாடகங்களை நடத்திக் கொண்டிருக்க வேண்டும் அதற்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் குறிப்பாக உங்கள் அம்மா அப்பாவை அழைத்து வந்து நாடகத்தை பார்க்கச் சொல்லுங்கள் இளைஞர்களும் நாடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் என்றார். பாரதி மன்ற தலைவர் தியாகராஜன் பேசும் போது இந்த நாடகத்திற்கு பல நல்ல உள்ளங்கள் ஆதரவு கொடுத்துள்ளன இது அதிகமான செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது தமிழக மேடை நாடக கலைஞர்கள் மலேசிய கலைஞர்களும் இணைந்து இப்படைப்பை படைக்க உள்ளனர்.

அனைவரையும் கவரும் வகையில் இந்த நாடகம் அமையும் டிக்கெட்டுகள் இப்பொழுது பரபரப்பான விற்பனையில் உள்ளன. 100, 200, 300 போன்ற விலையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்து வருகிறோம் அனைவரும் ஆதரவு தருக தாருங்கள் என்றார். தொடர்புக்கு 0127809390
