25.8 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

பிபிபி கட்சியை எந்த கொம்பானாலும் வீழ்த்த முடியாது!சத்யா சுதாகரன் முழக்கம்!

🔥 Views : 5
👁 Reading Now : 58

பல்லின மக்களைக் கொண்டிருக்கும் பிபிபி கட்சியை எந்த கொம்பானாலும் வீழ்த்த முடியாது என்று விலாயா மாநில பிபிபி கட்சியின் தலைவர் சத்யா சுதாகரன் தெரிவித்தார்.

பிபிபி கட்சியில் குழப்பம் விளைவிப்பவர்களுக்கு இடமில்லை.
மேலும் இந்த கட்சியில் குழப்பம் விளைவித்து வீழ்த்தி விடலாம் என்று யாரும் கனவு காண வேண்டாம் என்று அவர் எச்சரித்தார்.

டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் இப்போது பிபிபி கட்சி சரியான பாதையில் வெற்றி நடை போட்டு பயணிக்கிறது.

விலாயா மாநில பிபிபி உறுப்பினர்கள் கட்சிக்கும் தலைவருக்கும் முழு விசுவாசமாக இருப்பார்கள் என்றார்.

இன்று ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள டேவான் செர்பாகுணா மண்டபத்தில் மிகப்பெரிய நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான விலாயா மாநில பிபிபி மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே மக்களை பெரிதும் பாதிக்கும் பொருட்கள் விலைவாசி உயர்வை அரசாங்கம் கட்டுப் படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பொருட்கள் விலை உயர்வு நடுந்தர மக்களை பெரிதும் பாதிக்கிறது என்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்

Rumak Mambu Milik எனப்படும் மக்கள் சக்திக்கு ஏற்றவாறு வீடுகளை அரசாங்கம் அதிகம் கட்ட வேண்டும் என்று சத்யா பிரகாஷ் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles