26.4 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

பினாங்கில் நடைபெறவிருக்கும் ஏர் ஆசியாவின் ரேட்ரன் ஓட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர்

🔥 Views : 16
👁 Reading Now : 51

முதல் முறையாக பினாங்கில் நடைபெறவிருக்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஏர் ஆசியாவின் ரேட்ரன் ஓட்டத்தில் ஆயிரக்கணக்கான ஓட்டக்காரர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியான் வட்டாரத்தில் முக்கிய சுற்றுலா மையங்களின் கவனத்தை ஈர்க்கவும் பயணத்தை உற்சாகப்படுத்தவும் ஏர் ஆசியா மேற்கொள்ளும் யூகம் இதுவாகும்.
இவ்வாண்டு தொடக்கத்தில் இந்தோனேசியாவில் ஏர் ஆசியாவின் ரேட்ரன் ஓட்டத்தின் வெற்றியை தொடர்ந்து பினாங்கில் இந்த ஓட்டம் நடைபெறவிருக்கிறது.
இந்தோனேசியாவில் பாலித் தீவில் இயற்கை அழகை கொண்ட வழிகளில் நடைபெற்ற ஓட்டத்தில் 40 நாடுகளைச் சென்ற ஓட்டக்காரர்கள் பங்கு பெற்றனர்.
இப்பொழுது தீபகற்ப மலேசியாவில் ஏர் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய விமான மையமான பினாங்கில் ஏர் ஆசியா இந்த ஓட்டத்தை நடத்துகிறது.


எதிர்வரும் 28 செப்டம்பர் 2025 ஞாயிற்றுக்கிழமை கெர்னி பிளாஸாவில் இந்த ரேட்ரன் ஓட்டம் நடைபெறும்.
இப்ராந்தியத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஓட்டக்காரர்கள் இந்த ஓட்டத்தில் பங்கு பெற உள்ளனர்.
3கிமி,5கிமி மற்றும் 10கிமி என மூன்று பிரிவுகளாக இந்த ஓட்டம் நடைபெறும்.
இந்த ஓட்டத்திற்கான பதிவு நாள் இப்பொழுது முதல் 18 ஆகஸ்டு 2025 திறந்திருக்கும்.
இதனிடையே இந்த அர்த்தமுள்ள சமூக நிகழ்வு அனைத்து நிலையிளான மக்களை ஒன்றிணைக்கவே என பினாங்கு சுற்றுலா மற்றும் பொருளாதார படைப்பாற்றல் குழுவின் ஆட்சி குழு உறுப்பினர் வோங் ஹோன் வை கூறினார்.
ஏர் ஆசியா சமூகங்களை விமான பயணத்தின் வழி ஒன்றிணைப்பது மட்டுமல்லாமல், தரை மார்க்கத்திலும் ரேட்ரன் போன்ற ஓட்டு நிகழ்ச்சிகளை நடத்தி ஒன்றிணைப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
உற்சாகமான இந்த ஓட்ட நிகழ்ச்சிக்கு பினாங்கு மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே ரேட்ரன் ஓட்டம் மட்டுமின்றி அதற்கும் அப்பாற்பட்டது என ஏர் ஆசியா மலேசியாவின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் ஃபாரே மாஸ்புத்ரா கூறினார்.
இது பயணம், உள்ளூர் கலாச்சாரம் மற்றும் மக்களை ஒன்றிணைக்கும் நோக்கில் நடத்தப்படும் அற்புதமான நிகழ்வு என்றார் அவர்.
இந்தோனேசியாவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு தொடர்ந்து, பினாங்கில் இந்த ஓட்டத்தை நடத்துவதில் ஏர் ஆசியா பெருமை கொள்வதாக அவர் தெரிவித்தார்.
பினாங்கு மக்களை கவரும் ஒரு அழகான மற்றும் அற்புதமான நகரமாகும்.ரேட்ரன் ஓட்டம் இங்கு நடத்தப்படுவது மிகவும் பொருத்தமான ஒன்று என அவர் குறிப்பிட்டார்.
மேலும் இம்மாதத்தில் கெர்னி பிளாஸாவில் ஏர் ஆசியா கொண்டாட்டம் நடைபெறும் என அவர் சுட்டிக் காட்டினார்.
கிழக்குக் கரையின் முத்து என வர்ணிக்கப்படும் பினாங்கு பயணிகளை அதிகம் கவரும் ஒரு நகரமாகும்.
பினாங்கு ஏர் ஆசியா பயணிகளின் முன்னணி ஓய்வெடுக்கும் நகரமாகும்.
பினாங்கிற்கு 12 உள்நாட்டு மற்றும் அனைத்துலக நகரங்களுக்கு நேரடி விமான சேவைகளை ஏர் ஆசியா மேற்கொண்டு வருகிறது.
பினாங்கிலிருந்து கூச்சிங், கோத்தா கினபாலு, சிங்கப்பூர், ஜாக்கார்த்தா,ஹோ சி மின் நகரம்,மேடான் மற்றும் ஷென்சென் ஆக்கிய நகர்களுக்கு ஏர் ஆசியா நேரடி விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
தனது ஐந்து முக்கிய விமான மையங்களில் பினாங்கு முதல்நிலை வகுத்து வருகிறது.
குறிப்பாக இந்தோனேசியா, சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் பினாங்கை அதிகம் கவர்ந்து வருகின்றனர்.
ரேட்ரன் ஓட்டத்தில் கலந்து கொள்ள பதிவிற்கான இறுதி நாள் 18 ஆகஸ்ட்டு 2025 வரை தான்.
https://www.heyjom.com/event/AirAsia-RedRun-2025 என்ற அகப்பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles