
இந்த நிகழ்வு அண்மையில் நேதாஜி மட்டத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது அதிகமான முன்னாள் மகளிர் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இதற்கு தலைமை ஏற்று அதிகாரப்பூர்வமாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தொடக்கி வைத்தார் அவர் பேசும்போது ம இ கா என்றும் நிலையாக இருக்கும் இன்று ம இ கா ஒரு தனி பெரும் கட்சியாக விளங்கி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கும் மற்ற ஏழை குடும்பங்களுக்கும் ம இ கா உதவி செய்து வருகிறது. இந்தக் கட்சியை வளர்ப்பதற்கு நீங்கள் உறுதுணையாக உள்ளீர்கள். முன்னாள் மகளிர்களை காணும் போது எனக்கு பெருமையாக உள்ளது.

சிறப்பான முறையில் இந்த விழாவினை ஏற்பாடு செய்து உள்ளீர்கள். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ம இ கா என்றும் தனித்தன்மையுடன் இருக்கும் பல நல்ல திட்டங்களை நாம் செயல்படுத்தி வருகிறோம். அரசாங்கத்தில் எந்த ஒரு பதவியும் கேட்க மாட்டோம். நாங்கள் இப்படியே இருந்து கொள்கிறோம் என்றார்
