27 C
Kuala Lumpur
Friday, August 14, 2026

Vetri

தேசிய சுதந்திர மாதக் கொண்டாட்டம் – மலேசியா தெலுங்கு சங்கம் கோம்பாக் கிளை முன்னெடுப்பு!

🔥 Views : 23
👁 Reading Now : 59

தேசிய சுதந்திர மாதத்தை முன்னிட்டு, மலேசியா தெலுங்கு சங்கம் (TAM) கோம்பாக் கிளை தூகு நெகாரா, கோலாலம்பூர் வளாகத்தில் சிறப்பு விழாவை நடத்தியது. 150க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

மலேசியா தெலுங்கு சங்கத் தலைவர் டாக்டர் வெங்கட பிரதாப் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், அவர் உரையாற்றியபோது, “இன, மத, நிறம் என வேறுபாடின்றி ஒவ்வொரு மலேசியரும் தேசபக்தியை காக்க வேண்டும். அது மட்டுமே வலிமையான, ஒன்றுபட்ட, முன்னேறிய தேசத்தை உருவாக்கும் பாதையாகும்,” எனக் குறிப்பிட்டார்.

குழந்தைகள் தேசபக்தி கவிதைகளை வாசித்து நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தனர். மேலும், TAM துணைத் தலைவர் திரு. சத்யா சுதாகரன், துணைத் தலைவர்கள் திருமதி வீரலெட்சுமி மற்றும் திரு. சீதாராவ், கோம்பாக் கிளைத் தலைவர் திரு. திருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று ஒற்றுமை மற்றும் தேசபக்தி உணர்வை வலியுறுத்தினர்.

தூகு நெகாராவில் நடைபெற்ற இந்த விழா, உறுப்பினர்களிடையே தேசபக்தியை வலுப்படுத்தியதோடு, ஒற்றுமை, சமரசம் மற்றும் அன்பை மேம்படுத்தும் TAM இன் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles