27 C
Kuala Lumpur
Friday, August 14, 2026

Vetri

கோர்ட்டுமலை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி தங்கரத ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது

🔥 Views : 14
👁 Reading Now : 21

உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோலாலம்பூர் கோர்ட்டுமலை பிள்ளையார் கோவிலிலும் திருவிழா உற்சாகமாக நடைபெற்றது.

நேற்று இரவு 7.00 மணிக்கு தங்கரத ஊர்வலத்தை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். கோர்ட்டுமலை பிள்ளையார் கோவிலிலிருந்து புறப்பட்ட தங்கரதம் பெட்டாலிங் ஸ்ட்ரீட், ஜாலான் பண்டார் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில், பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா வழியாகச் சென்று இன்று அதிகாலை 2.00 மணிக்கு மீண்டும் கோர்ட்டுமலை பிள்ளையார் கோவிலை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிவஸ்ரீ சிவனாந்தா குருக்கள் பூஜையை நடத்தி வைத்தனர். பக்தர்கள் பெருமளவில் வந்து நீண்ட நேரம் காத்திருந்து விநாயகர் தரிசனம் செய்தனர்.

ஃபோர்ட் கிள்ளான் வட்டார வர்த்தக பிரமுகர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் வழக்கம்போல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். மேலும் பொதுமக்களும் பந்தல்கள் அமைத்து பக்தர்களுக்கு கனிம நீர் மற்றும் உணவுகளை வழங்கி சேவை செய்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles