25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

கோலாலம்பூரில் தேசிய கொடிகள் வழங்கும் நிகழ்ச்சி – துணை அமைச்சர் கலந்து கொண்டு சிறப்பித்தார்

🔥 Views : 19
👁 Reading Now : 69

இன்று ஆகஸ்ட் 31ஆம் தேதி மலேசியா தனது 68ஆம் மெர்டேக்கா தினத்தை கொண்டாடுகிறது. நாடு முழுவதும் மெர்டேக்கா கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்று வரும் நிலையில், தகவல் தொடர்பு துறை அமைச்சு பல இடங்களில் மக்களிடம் தேசிய கொடிகளை வழங்கி வருகிறது.

நேற்று கோலாலம்பூர் மஸ்ஜித் ஜமாக் எல்ஆர்டி முனையத்தில் நடைபெற்ற தேசிய கொடி வழங்கும் நிகழ்வில் தகவல் தொடர்பு துறை துணை அமைச்சர் தியோ நிக் சிங் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

செல்கோம்-டிஜி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், எல்ஆர்டி முனையத்தில் வந்த பொதுமக்களுக்கு தேசிய கொடிகள் வழங்கப்பட்டன. துணை அமைச்சர் தியோ நிக் சிங் நேரடியாக மக்களிடம் கொடிகளை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

மலேசியர்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடிகளை பறக்கவிட்டு நாட்டுப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles