25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

“என் நாடே என் சுவாசமே” தலைப்பில் சுதந்திர தினக் கவிதைப் போட்டி – மஇகா இளைஞர் பகுதி அறிவிப்பு

🔥 Views : 5
👁 Reading Now : 28

மஇகா இளைஞர் பகுதி ஏற்பாட்டில் “என் நாடே என் சுவாசமே” என்ற தலைப்பில் சுதந்திர தினக் கவிதைப் போட்டி ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 21 வரை நடைபெற உள்ளது என்று இளைஞர் பகுதி தலைவர் அர்வின் தெரிவித்தார்.

மஇகா அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், இந்தப் போட்டி மூன்று பிரிவுகளாக — பொது பிரிவு, பல்கலைக்கழக-கல்லூரி பிரிவு, இடைநிலைப் பள்ளி பிரிவு — நடத்தப்பட உள்ளது என்றார்.

போட்டியில் பரிசுத் தொகையாக:

  • முதல் இடம்: RM 1000
  • இரண்டாம் இடம்: RM 700
  • மூன்றாம் இடம்: RM 500
  • ஆறுதல் பரிசு: RM 100

வழங்கப்படும் எனவும், நடுவர் குழுவின் தீர்ப்பு இறுதியானது என்றும் அவர் குறிப்பிட்டார். போட்டியின் விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் எனவும், மேலதிகத் தகவல்களை மஇகா இணையதளம் மற்றும் முகநூல் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles