
மலேசியத் தினத்தை முன்னிட்டு, சுற்றுலா துறை அமைச்சின் ஆதரவுடன் கலை, கலாச்சார ராதா கிருஷ்ணன் பைன்ட் ஆர்ட்ஸ் ஏற்பாட்டில் “Pesta Budaya Malaysia” கொண்டாட்டம் செப்டம்பர் 12 முதல் 16 வரை தாமான் தித்தி வங்சாவில் நடைபெறுகிறது.
தினசரி காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறும் இந்த விழாவை காண சுமார் 20,000 பேர் பங்கேற்பார்கள் என்று விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர் நளினி தெரிவித்தார்.
நாட்டின் புகழ்பெற்ற கலைஞர்கள் டத்தோ எலிகேட் ஆறுமுகம், சந்தேஷ், டார்க்கி, லோக்காப் மற்றும் மண்ணின் மைந்தர்கள் ஆகியோர் மேடை ஏறி பொதுமக்களை மகிழ்விப்பார்கள். இந்திய பாரம்பரிய கலைகள் — சிலம்பாட்டம், உருளிமேளம், பாரம்பரிய இந்திய நடனங்கள் — சிறப்பாக இடம்பெற உள்ளன.

ஐந்து நாள் கொண்டாட்டத்தில் 2,000 கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இந்த விழா மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் நளினி தெரிவித்தார்.
சுற்றுலா துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோ கிங் சிம், ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் சிறப்பு வருகை புரிகிறார்கள்.
பொதுமக்கள் அனைவரும் இலவசமாக நடைபெறும் இந்த கலாச்சாரக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.



