27.3 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

நோய்த்தொற்றுக்கு 21 வயது இளைஞர் பலி!

நாட்டில் நோய்த்தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தாலும் இன்று இந்த கொடிய நோய்க்கு 27 வயது நிரம்பிய இளைஞர் பலியானதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
நேற்று நாட்டில் கோவிட் 19 நோய்தொற்றுக்கு 21 வயது இளைஞர் உள்பட 64 பேர் மரணமடைந்தனர்.
இரத்த அழுத்தம் மற்றும் மூளையில் இரத்தக் கசிவு ஆகிய பிரச்னைகளை எதிர்நோக்கியிருந்த அந்த இளைஞர் சிரம்பானில் காலமானார்.
28 வயதுடைய மற்றொரு இளைஞர் கோலாலம்பூரில் காலமானதாக அவர் தெரிவித்தார். எனினும், அவரது மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்ல.
நேற்று மரணமடைந்தவர்களில் பலர் வயது முதிர்ந்தவர்கள் என்பதோடு நீரிழிவு, இருதய நோய், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles