31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி அவசியமாகும்

🔥 Views : 5
👁 Reading Now : 61

கர்ப்பிணி பெண்கள் கர்ப்பம் தரித்த 14ஆவது வாரத்திலிருந்து 33ஆவது வாரத்திற்குள் கோவிட் தடுப்பூசி பெறுவது சிறந்தது என்று அறிவுறுத்தப்படுகிறது.
கர்ப்பம் தரித்த பெண்களின் உடல் தங்கள் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு உடல் ரீதியான சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுகிறது எனவே 14ஆவது வாரத்திலிருந்து 33ஆவது வாரத்திற்குள் இந்த தடுப்பூசியை பெற்றுக் சிறந்தது என்று கோலாலம்பூர் பந்தாய் தனியார் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு தலைவர் பிரீமிதா தாமோதரன் தெரிவித்தார்.


Covid-19 தடுப்பூசி பெற்றுக் கொள்வதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் இருக்குமா என்று அவரிடம் கேட்டபோது, ஒரு சில தினங்களுக்கு அல்லது மிகக்குறுகிய காலக்கெடுவுக்கு மட்டுமே இந்த பக்க விளைவுகள் அந்த கர்ப்பிணிபெண்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதன்பிறகு அந்த அந்த பக்க விளைவுகள் தானாக இல்லாமல் போய்விடும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி என்பது அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். இது கர்ப்பிணி பெண்களுக்கான விழிப்புணர்வு என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பொதுவாக சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை படித்துவிட்டு இவர்கள் உண்மையற்ற கருத்தை தங்கள் சிந்தையில் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles