32.9 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

கோலகுபு பாருவில் SPM தேர்வில தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வெகுமதி

🔥 Views : 5
👁 Reading Now : 24

எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சி பெற்ற கோலகுபு பாரு வட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெகுமதிகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக கோல குபு பாரு தொகுதி வாக்காளர்களின் பிள்ளைகள் சிறப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த வெகுமதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
5 ‘ஏ‘க்கு மேல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என்று கோலகுபு பாரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லு கீ ஹியோங் கூறினார்
எஸ்.பி.எம் தேர்வில் 5ஏ பெற்ற மாணவர்களுக்கு 80 வெள்ளியும் 6ஏ பெற்ற மாணவர்களுக்கு 100 வெள்ளியும் 7ஏ பெற்ற மாணவர்களுக்கு 150 வெள்ளியும் 8ஏ பெற்ற மாணவர்களுக்கு 200 வெள்ளியும் 9ஏ பெற்ற மாணவர்களுக்கு 250 வெள்ளியும் 10ஏ மற்றும் அதற்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு 300 வெள்ளியும் வழங்கப்படும் என்று லு கீ ஹியோங் கூறினார்.
சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர்களாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles